முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 4

17 Jun, 2021 | 07:14 PM
image

மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று  புதன்கிழமை (16) உத்தரவிட்டார். 

கடந்த மே மாதம் 18 ஆம் திகதி  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு  பெறப்பட்ட  நிலையில் அவர் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த  நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா பொலிசர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற அனுமதியினை பெற்று 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து நேற்று  புதன்கிழமை (16) குறித்த  வழக்கு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட போது குற்றம்சாட்டப்பட்வர்கள் 10 பேரின் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் ஆஜராகிய நிலையில்; நிலையில் பயணக்கட்டுப்பாடு மற்றும் கொரோனா தொற்று காரணங்களால்  நீதிமன்றத்துக்கு அழைத்துவர முடியாத நிலையில் அவர்களை  தொடாந்தும் 30 ஆம் திகதிவரை 14 நாட்கள் தொடர்ந்தும்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32