கஸகஸ்தான் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையர்களை பங்கேற்க எடுத்த முயற்சி தோல்வி !

Published By: Gayathri

17 Jun, 2021 | 07:12 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர் )

டோக்கியோ ஒலிம்பிக் தகுதி அடைவு மட்டத்தை எட்டுவதற்காக கஸகஸ்தானில் நடைறெவுள்ள மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் ஆறு பேரை  பங்கேற்கச் செய்வதற்காக இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் எடுத்த முயற்சி தோல்வில் முடிந்துள்ளதாக தெரிய வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கான அடைவு மட்டத்தை அண்மித்து செல்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்று அச்சுறுத்தலால் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாது போனதுடன், சீரற்ற காலநிலை காரணமாக போட்டிகளில் பங்கேற்ற வீர,வீராங்கனைகளால் சிறந்த ஆற்றல்களுக்கு வரமுடியாது போயிருந்தது. 

இதன் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்ட முடியாதுபோயுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளை கஸகஸ்தான் மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்கு  இலங்கை மெய்வல்லுநர் சங்கம் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தது.

கஸகஸ்தான் அழைப்பு மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 19 ஆம், 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்நாட்டுக்கான வீசா பெறுவதில்  இழுபறி காணப்படுவதால்  இலங்கை வீர, வீராங்கனைகள்  குறித்த மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அற்றுப்போயுள்ளதாக தெரியவருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06