அமெரிக்காவில் கனெக்டிகட்  மாகாணத்தில், அம்மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், சரளா வித்யா நாகலா என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். 

மேலும், குறித்தப் பெண், சிவில் உரிமை சட்டத்தரணி ஆவார். அத்தோடு, இந்த பரிந்துரையை செனட் சபை ஏற்று அங்கீகரித்தால், கனெக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் அமர்வது இதுவே முதல் முறை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதன் பின்னர், பல முக்கிய பதவிகளுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தோர் தெரிவு செய்யப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.