மிகவும் அபாயமான கொவிட் வைரஸ் சமூகத்தில் அடையாளம் : தடுப்பூசி பெற்றவருக்கும் பரவும் !

Published By: Digital Desk 3

17 Jun, 2021 | 02:05 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பில் தினமும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில், பி.1.617.2 என்ற நிலைமாறியே வைரஸ் பரவலே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்திருக்கும்  வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர அதில் , கொழும்பில் பரவுவது பி.1.617.2 வைரஸாக இருக்கலாம் என்று அனுமானிக்கலாம்.

இந்த வைரஸானது பி.117 வைரஸை விட 50 வீதம் வேகமாக பரவக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது மிகவும் கடுமையானது என்பதோடு முதலாம் கட்டமாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் கூட இது பாதிப்பை ஏற்படுத்தும்.' என்று குறிப்பிட்டுள்ளார். 

கொவிட் தொற்று ஆரம்பமான நாள் முதல் மேல் மாகாணமே இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் நேற்று காலை வரை 1,22,259 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 58,151 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40