சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோரின் உச்சி மாநாட்டுக்கு ஒசாமா பின் லேடனின் மருமகள் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் மறைந்த முன்னாள் தலைவரான ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின்லேடன் (வயது 34)  புதன்கிழமை ஜெனீவாவில் ஒரு படகில் “ட்ரம்ப் வென்றார்” என்ற வார்த்தை அடங்கிய பதாகையை கையில் ஏந்தி அசைத்த வகையில் உச்சி மாநாட்டுக்கான தனது எதிர்ப்பினை வெளியிட்டார்.

அவரின் இந்த வெளிப்பாடானது, 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் பின் லேடனின் மருமகள் 2016 மற்றும் 2020 அமெரிக்க தேர்தல்களில் ட்ரம்ப்பை ஆதரித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை ஜெனீவாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, இரு நாட்டின் பதற்றமான இருதரப்பு உறவுகள், ஆயுதக் கட்டுப்பாடு, இணைய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் போன்ற பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்தார்.

சுமார் 4 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு உச்சிமாநாடு முடிந்தது, 

இரு தரப்பினரும் கூட்டத்திற்குப் பிறகு நேர்மறையான கருத்துக்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.