ஞானசார தேரர் - அதுரலியே ரதன தேரர் பாராளுமன்ற பதவி விவகாரம்: கட்சி தலையிட முடியாது - அபே ஜனபல வேகய

Published By: J.G.Stephan

17 Jun, 2021 | 01:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர்  அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும்  எடுக்க முடியாது.  ஞானசார தேரரும், அத்துரலிய தேரரும் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்காக  செய்துக் கொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார்.

 அபேஜன பல வேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனம்  குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 கடந்த வருடம் இடம் பெற்ற பொதுத்தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற மொத்த வாக்குகளுக்கு அமைய ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது. இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் விமல் திஸ்ஸ தேரர், அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான  தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் ஆகியோர் உரிமை  கோரினார்கள்.

  ஒரு தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில்  மாதகணக்கில் கட்சிக்குள் முரண்பாடுகள் காணப்பட்டன. பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பாராளுமன்றிற்கு நேரடியாக செல்வதில் சட்ட சிக்கல் காணப்பட்டது.

  பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒரு தேசிய பட்டியல்  ஊடாக அத்துரலியே ரத்ன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக கடந்த ஜனவரி மாதம் பதவி பிரமாணம் செய்தார். ஆறு மாத காலத்திற்கு மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆகவே அத்துரலியே ரத்ன தேரர் சுயமாக பாராளுமன்ற  உறுபபினர் பதவியை தனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தற்போது குறிப்பிட்டுள்ளார்.

 எக்காரணிகளுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.  ஆறு மாத காலத்திற்கு மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க அனுமதி வழங்கப்பட்டது என ஞானசார தேரர் குறிப்பிடுகிறார். ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்காக இவ்விருவரும் செய்துக் கொண்ட ஒப்பந்தம் ஏதும் கட்சிக்கு தெரியாது.

 ஞானசார தேரர், அத்துரலியே ரத்ன தேரர் இருவருக்குமிடையினால் பாராளுமன்ற  உறுப்பினர் பதவி விடயத்தில் அபே ஜன பல வேகய கட்சியால் எவ்வித் தீர்வையும் வழங்க முடியாது . இருவரும்  பேசி இப்பிரச்சினைக்கு இணக்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04