(எம்.மனோசித்ரா)

கிராமிய வீதி அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சு 20,903 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு தலா 2 மில்லியன் ரூபா செலவிலான வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் யோசனைகளை முன்வைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவான தூரத்தை உடைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு முன்னுரிமையளித்து இந்த வேலைத்திட்டங்களை  முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த வேலைத்திட்டத்திற்கமைய 5,991 வீதிகள் இதுவரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்காக 5,228 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிகளவானோர் பயணிக்கக் கூடியதும் , பிரதான வீதிக்கு நுழையக் கூடியதுமான வீதிகளுக்கு முன்னுரிமையளித்து இந்த வேலைத்திட்டம் முன்னனெடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.