கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம், இணையவழியூடாக மதுபான விற்பனை நடவடிக்கைக்கு அனுமதி வழங்காது என்று அதன் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இணைய வழியூடாக மதுபான விற்பனைக்கு  நிதி அமைச்சு அனுமதி வழங்கியிருந்தபோதிலும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் ஆட்சேபனைகள் மற்றும் தற்போதைய கொவிட் நிலைமைகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இணையவழியூடாக மதுபான விற்பனைக்கு நிதி அமைச்சர் அனுமதி வழங்கியிருந்த போதிலும்,  மதுவரி திணைக்களம் கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் ஒப்புதலுக்காக காத்திருந்தது.

இந் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.