யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார். 

இன்றையதினம் காலை  புத்தூர் - நிலாவரை வீதி வழியாக சென்று கொண்டிருந்த வேளையே,  40 வயது மதிக்கத்தக்க  குறித்த நபர்,  துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார். 

அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். 

பிரேத பரிசோதனைக்காக்க சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.