இலங்கையிலிருந்து வருகை பயணியொருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஹொங்கொங்கின் சுகாதார பாதுகாப்பு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஹொங்கொங்கில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11,881 ஆக உயர்வடைந்துள்ளது.

ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக ஒன்பது நாட்களுக்குள் உள்ளூர் கொவிட் தொற்றுகள் எவையும் பதிவாகவில்லை. 

இந் நிலையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்று இலங்கையில் இருந்து வந்த ஒரு நபர் சம்பந்தப்பட்டதாக ஹொங்கொங் சுகாதார பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 14 நாட்களில் மொத்தம் 33 கொவிட் நோயாளர்கள் ஹொங்கொங்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவற்றில் மூன்று தொற்றுக்கள் உள்ளூர்  சம்பந்தப்பட்டவை.

பெப்ரவரி 26 அன்று ஹொங்கொங் கொவிட் -19 தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்தியது, இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமான டோஸ் அளவுகள் வழங்கப்பட்டுள்ளன.