இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கு முன்னதாக இடம்பெற்ற குசல் பெரேரா மற்றும் குசல் மெண்டீஸ் அணியினருக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி ஆட்டம் சமனிலையில் முடிவடைந்துள்ளது.
இந்த ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டீஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை குவித்தனர்.
அணி சார்பில் ரமேஸ் மெண்டீஸ் 71(89) ஓட்டங்கயைும், இசுறு உதான 44 (57) ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 39 (34) ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 19 (19) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் அகில தனஞ்சய 3/28 விக்கெட்டுகளையும், சமிக்க கருணாரத்ன 3/38 விக்கெட்டுகயைும், பின்னுர பெர்னாண்டோ 2/38 விக்கெட்டுகளையும் மற்றும் நுவான் பிரதீப் 1/20 விக்கெட்டுகளையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குசல் பெரேரா அணியினரும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களையே பெற்றது.
அவிஷ்க பெர்னாண்டோ 64 (71) ஓட்டங்களையும், தசூன் சானக்க 44 (54) ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 30 (27) ஓட்டங்களையும் மற்றும் குசல் பெரேரா 28 (25) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் அசித பெர்னாண்டோ 3/43 விக்கெட்டுகளையும், சாமர 2/26 விக்கெட்டுகளையும், ஜயவிக்ரம 2/44 விக்கெட்டுகளையும், ஹசரங்க 1/37 விக்கெட்டுகளையும், ரமேஸ் மெண்டீஸ் 1/39 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM