யாழ்.நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் விஷேட ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் வேண்டுகோளின் பேரில் இந்த விஷேட சேவை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று தினங்களில் கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணிக்கும் 4021ஆம் இலக்கம் கொண்ட ரயிலில் மேலதிமாக குளிரூட்டப்பட்ட பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படும். 

அதேபோல் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து கல்கிஸை ரயில் நிலையம் வரையிலும் பயணிக்கும் 4022ஆம் இலக்கம் கொண்ட ரயிலில் மேலதிமாக குளிரூட்டப்பட்ட பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.