கொவிட்-19 இரண்டாவது அலையை எதிர்ககொண்டுள்ள ஜம்மு-காஷ்மீரில், குடிமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த தடுப்பூசி திட்டத்திற்குள் பழங்குடியினர் உட்பட  அனைத்து  பகுதிகளில் உள்ள தொலைதூர கிராமங்களை சென்றடையுவம் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் அதன் தடுப்பூசி இயக்கத்தை தொலைதூர கிராமங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது, ராஜோரியின் தார் கிராமத்தின் நாடோடி மக்களை கூட சென்றடைகிறது. பழங்குடியினரான மஜூரிம்  என்பவர் கூறுகையில், எங்கள் கிராமம் ஒரு தொலைதூர பகுதியில் உள்ளது. இங்கு சுகாதார அதிகாரிகள் வந்துள்ளமையானது முக்கியமானதாகும். இதற்காக நன்றி கூறுவதாக தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கியதன் பின்னர் வீட்டுக்கு வீடு  சென்று  தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் உடல் நிலை குறித்தும் காஷ்மீரின் சுகாதார உத்தியோகஸ்தர்கள் கண்காணித்து வருகின்றனர்.

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.  பயனாளிகளுடனதற்போது 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. 

இதுவரையில் சுமார் 90 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.