(லியோ நிரோஷ தர்ஷன்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது சம்மேளனத்தில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியை பிரிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஐந்து நாள் விஜயமாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு புதன் கிழமை மலேசியாவிற்கு செல்கின்றது.

மலேசியாவிற்கான விஜயத்தில் கூட்டு எதிர் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ , றோஹான் ரத்வத்த உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலர், இணைந்து கொண்டுள்ளதாக  உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார். 

கட்சி சம்மேளனத்திற்கான அழைப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் எவ்விதமான தயக்கங்களும் இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளதுடன், சம்மேளனத்தில் கலந்துக் கொள்ளாதவர்கள் குறித்து எதிர் காலத்தில் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.