பிரேம்ஜி அமரனின் 'தமிழ் ராக்கர்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By Gayathri

17 Jun, 2021 | 07:45 AM
image

இசையமைப்பாளரும் நடிகருமான பிரேம்ஜி அமரன் நடிப்பில் தயாராகிவரும் 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் பரணி ஜெயபால் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'தமிழ் ராக்கர்ஸ்'. இதில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அத்துடன் இப்படத்திற்கான பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார் பிரேம்ஜி அமரன். 

ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

தமிழ் ராக்கர்ஸ் என்பது திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளம் ஒன்றின் பெயர் என்பதும் இதுபோன்ற தலைப்பை வைத்திருப்பதும், இதில் பிரேம்ஜி அமரன் ஒரு கையில் சைக்கிள் செயினையும், மறு கையில் மது போத்தலையும் வாயில் புகையும் சிகரட்டுடன் டானாக காட்சி தருவதால் இணையத்தில் இரசிகர்கள் கலவையான விமர்சனங்களுடன் வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்