(எம்.மனோசித்ரா)
இணையத்தளத்தினூடாக மதுபான விற்பனை செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது மக்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்று கருத முடியாது.
ஆனால் வைத்தியர்கள் என்ற ரீதியில் எந்த அடிப்படையிலும் மதுபான பாவனையை நாம் அனுமதிப்பதில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவற்றிலிருந்து விலகியிருப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியதே மிக முக்கியத்துவமுடையதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
வைத்தியர்கள் என்ற ரீதியில் எந்த அடிப்படையிலும் மதுபான பாவனையை நாம் அனுமதிப்பதில்லை.
எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவற்றிலிருந்து விலகியிருப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியதே மிக முக்கியத்துவமுடையதாகும்.
எவ்வாறிருப்பினும் மதுபான உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை உள்ளிட்ட சகல விடயங்களும் மதுவரி திணைக்களத்தினாலேயே கண்காணிக்கப்படுகின்றன. எனவே இது தொடர்பில் மதுவரி திணைக்களம் அவதானம் செலுத்தும் என்று எண்ணுகின்றோம்.
இணையவழியூடாக மதுபானத்தினை வீடுகளுக்கே சென்று விநியோகிப்பதால் மக்கள் ஒன்றுகூடக் கூடிய வாய்ப்புக்கள் குறைவு இந்த போதிலும் , இவ்வாறு பெறுபவர்கள் அதனை மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கின்றார்களா என்பது குறித்து மதுவரி திணைக்களம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM