வெள்ளத்திற்குப் பிறகு அவுஸ்திரேலிய நிலப்பரப்பை சூழ்ந்த சிலந்தி வலைகள்

Published By: Digital Desk 3

16 Jun, 2021 | 05:39 PM
image

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  நகரங்களுக்கு அருகே மரங்கள் மற்றும் புல்வெளிகளில் சிலந்தி வலைகள் பரந்து விரிந்து காணப்படுகிறது.

இது குறித்து  விக்டோரியாவின் கிப்ஸ்லேண்ட் பிராந்தியத்தில் வசிப்பவர்கள் பலத்த மழையின் பின்னர் சிலந்தி வலை முக்காடுகள் (Veil) தோன்றியதாக கூறுகின்றனர்.

ஒரு பகுதியில் வீதியில் சிலந்தி வலை ஒரு கிலோமீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது.

"பலூனிங்" என்று அழைக்கப்படும் உயிர்வாழும் தந்திரத்தால் முக்காடுகள் உருவாக்கப்படுகின்றன, அங்கு சிலந்திகள் வெளியேற்றும்  சிலந்திப்பட்டு நூல் உயர்ந்த தரையில் பரவியுள்ளன.

விக்டோரியா அருங்காட்சியகத்தைச் சேர்ந்த  பூச்சிகள் கண்காணிப்பாளரான டாக்டர் கென் வாக்கர், மில்லியன் கணக்கான சிலந்திகள் சுற்றியுள்ள மரங்களுக்கு புரத இழையைக் கொண்டு  வலைகளை உருவாக்குகின்றன.

குறித்த நுட்பமான வலைகள் இந்த வார இறுதியில் சிதைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right