ஓமந்தை பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஓமந்தை - பாலமோட்டை  பகுதியில் வீடொன்றை நிர்மானிப்பதற்காக நிலத்தை தோண்டிய போது குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததனையடுத்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது எம்.ஜி.எம்.ஜி. மற்றும் எல்.எம்.ஜி. ரக துப்பாக்கிகள் 30 கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மீண்டும் பயன்படுத்தமுடியாதவாறு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஆயுதங்கள் தொடர்பான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.