கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் குழந்தையை பிரசவித்த கர்ப்பிணிப் பெண்: நீரில் மூழ்கி குழந்தை பலி..!

Published By: J.G.Stephan

16 Jun, 2021 | 03:48 PM
image

கர்ப்பிணிப் பெண் ஒருவர் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றிற்குள் விழுந்துள்ள நிலையில், குழந்தையை பிரசவித்துள்ளார். இந்நிலையில், குழந்தை நீரில் மூழ்கி இறந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரம்புக்கனை, பத்தாம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய கர்ப்பிணித்தாயே இவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.

குறித்த கர்ப்பிணித் தாய் வீட்டில் இல்லாததை அவதானித்த வீட்டார் அவரைத் தேடியுள்ள நிலையில், வீட்டுத் தோட்டத்திற்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குறித்த கர்ப்பிணித் தாயார் விழுந்து கிடந்தமை தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், அயல் வீட்டாரின் உதவியுடன் குறித்த கர்ப்பிணிப் பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, கிணற்றில் விழுந்துள்ள நிலையில் குழந்தை பிரசவமானமை தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, கிணற்றில் குழந்தை மரணித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59