தனிமைப்படுத்தலில் இருந்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.

வவுனியா கற்குளி பகுதியில் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் இன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.       

குறித்த நபர் உட்பட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த அவரை காணாமல் அவரது உறவினர்கள் தேடியுள்ள நிலையில், குறித்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கற்குழி பகுதியை சேர்ந்த கணேசன் இளங்குமரன் என்ற, 51 வயதுடைய  நபரே, இவ்வாறு மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.       

மேலும், குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் விசாரணைகளிலிருந்து  தெரியவந்துள்ளது.