அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில்  கலிபோர்னியா மாநிலம் கொரோனா உயிரிழப்புகளில் முதல் இடத்தில் உள்ளது. அங்கு  63,191 பேர்  உயிரிழந்துள்ளார்கள்.

53,558 பேர் உயிரிழந்த நிலையில்  நியூயோர்க் இரண்டாவது இடத்திலும், 51,940  பேர் உயிரிழந்த நிலையில் டெக்சாஸ் மூன்றாவது இடத்திலும்,  37,265 பேர் உயிரிழந்த நிலையில் புளோரிடா நான்காவது இடத்திலும் உள்ளதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் நிலையம் (CSSE) தெரிவித்துள்ளது.

20,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை கொண்ட மாநிலங்களாக பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, இல்லினொய்ஸ், ஜோர்ஜியா, மிச்சிகன் மற்றும் ஓஹியோ ஆகியவை அடங்கும்.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காவுள்ளது.  உலகில் அதிகளவான கொரோனா தொற்றாளர்களையும்  மற்றும் உயிரிழப்புகளையும் அமெரிக்கா கொண்டுள்ளது. 

அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,477,016 ஆக உயர்ந்துள்ளது.

2020 பெப்ரவரி 29 ஆம் திகதி  வொஷிங்டன் மாநிலத்தில் முதலாவது கொரோனா மரணத்தை அமெரிக்கா பதிவு செய்தது.

மார்ச் 24, 2020 அன்று அமெரிக்கா மொத்தம் 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது.

முதல் இறப்புக்கு 84 நாட்களுக்குப் பிறகு, மே 23 2020   அமெரிக்கா 100,000 உயிரிழப்புகளை கடந்தது.

120 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 20, 2020 அன்று அமெரிக்கா 200,000 உயிரிழப்புகளை கடந்தது.

82 நாட்களுக்குப் பிறகு, 2020 டிசம்பர் 11 அன்று அமெரிக்கா 300,000 உயிரிழப்புகளை கடந்தது.

35 நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 16, 2021 அன்று அமெரிக்கா 400,000 உயிரிழப்புகளை கடந்தது.

37 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 22, 2021 அன்று அமெரிக்கா 500,000 உயிரிழப்புகளை கடந்தது.

113 நாட்களுக்குப் பிறகு, ஜூன் 15, 2021 இல் அமெரிக்கா 600,000 உயிரிழப்புகளை கடந்துள்ளது.

ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களின் படி, உலகின் மற்ற எட்டு நாடுகளில் மொத்தம் 100,000 க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன:

பிரேசிலில் மொத்தம் 488,228 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் 377,031 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவில் மொத்தம் 230,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரு, இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 100,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.