குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் குறித்து பேலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேற்கண்ட இருவரும் தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு, நேற்று மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷ்சங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே அது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் ஆகியோரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கம்பஹா மேல் நீதிமன்றுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றும் சற்று முன்னர் அறிவித்தது.

இவர்கள் இருவரும் பிணை கோரி, கம்பஹா நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் முன்னர் நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.