டோக்கியோ ஒலிம்பிக் ; வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களை அனுமதிப்பதில் ஜப்பான் அவதானம்

By Vishnu

16 Jun, 2021 | 09:15 AM
image

2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு குறைந்த எண்ணிக்கையிலான உள்நாட்டு பார்வையாளர்களை அனுமதிக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விளையாட்டுகளின் போது 10,000 பார்வையாளர்கள் அல்லது ஒரு இடத்தின் திறனில் 50 சதவீதம் வரை அனுமதிக்கும் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக  ஜப்பானின் கியோடோ செய்திச் சேவை செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு தகவல் வெளியிட்டுள்ளது.

அதேநேரம் பிரதமரின் யோஷிஹைட் சுகாவின் நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் உள்நாட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கையை 5,000 அல்லது 10,000 ஆக உயர்த்துவது போன்ற விருப்பங்கள் குறித்து மறுஆய்வு செய்து வருவதாக ஜப்பான் தொலைக்காட்சி வலையமைப்பான ஆசாஹி தெரிவித்துள்ளது.

ஜூலை 23 ஆரம்பமாகும் டோக்கியோ விளையாட்டுகளுக்கு ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டோக்கியோ ஒலிம்பிக் தொடர்பில் ஜப்பானிய பொருளாதார அமைச்சர் யசுதோஷி நிஷிமுரா மற்றும் அரசாங்கத்தின் உயர் மருத்துவ ஆலோசகர் ஷிகெரு ஓமி ஆகியோர் இன்று புதன்கிழமை ஒரு கூட்டு செய்தி மாநாட்டை நடத்துவார்கள் என்று அமைச்சரவை அலுவலகம் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51
news-image

மில்லரின் அதிரடி வீண் : தென்னாபிரிக்காவை...

2022-10-03 10:49:34
news-image

கிரிக்கெட்டை போலவே கால்பந்தையும் பிரபலமாக்குவதே தனது...

2022-10-02 13:58:36
news-image

திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

2022-10-02 12:37:19
news-image

மேல்மாகாண காட்டா சுற்றுபோட்டி

2022-10-02 12:02:04
news-image

மகளிர் ஆசிய கிண்ண இருபது -...

2022-10-02 10:48:45
news-image

இந்திய லெஜெண்ட்ஸ் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது...

2022-10-02 10:47:18
news-image

பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா ?...

2022-10-01 12:20:06
news-image

பாகிஸ்தானை 8 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து

2022-10-01 11:14:39
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கான உத்தியோகபூர்வ ஜெர்சி...

2022-10-01 10:37:39
news-image

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சுக்கு உத்தரவு

2022-10-01 09:35:51