தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தாலும் மரணங்களின் வீதத்தில் மாற்றமில்லை - பதுளையில் தந்தையும் மகளும் உயிரிழப்பு 

Published By: Digital Desk 4

15 Jun, 2021 | 08:23 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது மிகச்சிறியளவில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும், மரணங்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனினும் தற்போது நாளாந்தம் பதிவாகும் மரணங்களை அறிவிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதால் நாட்டின் நிலைமை குறித்து ஓரளவு சரியான மதிப்பீட்டை செய்ய முடியும் என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக கொவிட் மரணங்கள் பதிவாகிக் கொண்டிருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தில் பசறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகளும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  பசறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் இதனை உறுதிப்படுத்தினார்.

இவர்களில் 22 வயதுடைய மகள் கடந்த 4 ஆம் திகதி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் இவ்வாறு உயிரிழந்த மகளின் 71 வயதுடைய தந்தை இன்று செவ்வாய்கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் பசறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை 57 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 32 ஆண்களும் 25 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதே வேளை நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணி வரை 1843 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் நாட்டில் 227 765 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 190 464 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 35 098 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிழக்கு புகையிரத பிரச்சினைகளுக்கு நேரடி கள...

2026-07-10 15:31:04
news-image

சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும்...

2026-07-10 20:04:01
news-image

சிறைச்சாலை அனர்த்தம் அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகிறது...

2026-07-10 12:46:16
news-image

கந்தளாயில் டிப்பர் - மோட்டார் சைக்கிள்...

2026-07-10 19:57:00
news-image

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம்:...

2026-07-10 19:51:18
news-image

67,000 குடும்பங்களுக்கு குடிநீர்; இலங்கையின் இரண்டாவது...

2026-07-10 19:26:46
news-image

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்:...

2026-07-10 18:54:56
news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

143 களஞ்சியசாலைகளில் திங்கள் முதல் நெல்...

2026-07-10 19:13:12
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12