(எம்.மனோசித்ரா)
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ள போதிலும் , தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை 1,356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் அவற்றை மீறியமை அதிகளவானோர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.
இவர்களில் அதிகளவானோர் மாத்தளை மாவட்டத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய இம்மாட்டத்தில் மாத்திரம் 146 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கண்டியில் 134 பேரும் , குளியாபிட்டி பிரதேசத்தில் 116 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர். அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 33,949 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 14 இடங்களில் 2,795 வாகனங்களும் அவற்றில் பயணித்த பயணித்த 5,333 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதன்போது அநாவசியமாக மாகாண எல்லையைக் கடக்க முற்பட்ட 56 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM