ஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது

Published By: Digital Desk 3

15 Jun, 2021 | 03:24 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது.

மாறாக இலங்கையின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பில் காணப்படும் நிபந்தனைகளில் மாற்றம் செய்யுமாறு அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தார்மீக உரிமை கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை ஆடை தொழிற்துறை மற்றும் இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி உள்ளிட்ட விடயங்களில் பிரதானமாக தாக்கம் செலுத்துகின்றது. இலங்கை சுயாதீனமானதொரு நாடாகும். எமது நாடு அரசிலமைப்பிற்கு ஏற்பவே நிர்வகிக்கப்படுகிறது.

அரசியலமைப்பானது மக்களின் இறையாண்மைக்கு உட்பட்ட அடிப்படையிலேயே செயற்படுத்தப்படுகிறது. மக்கள் இறையாண்மை நிறைவேற்றதிகாரத்துறை , சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை என்பவற்றால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவற்றுக்குள் உள்ளடங்கியுள்ள மக்களின் உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படும்.

உதாரணமாக ஜனாதிபதியால் எடுக்கப்படும் தீர்மானம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதனை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும். இதுவே முறையான நடைமுறையாகும்.

இவ்வாறான நிலையில் உலகிலுள்ள வேறு ஏதேனுமொரு அமைப்பு எமக்கு நிவாரணமொன்றை வழங்குமாயின் , அதனுடன் தொடர்புடைய வியடங்கள் தொடர்பில் மாத்திரமே அவதானம் செலுத்துமாயின் அது பொறுத்தமானதாக இருக்கும்.

அதற்கமைய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையுடன் தொடர்புடைய சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான விடயங்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தால் அதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

அதே போன்று ஆடை தொழிற்சாலைகளில் ஏற்படுத்தி தரப்படுகின்ற அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் காணப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கும் அவர்களுக்கு முழுமையான உரிமை காணப்படுகிறது.

ஆனால் பிரிதொரு சுயாதீனமான நாட்டின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பில் காணப்படும் நிபந்தனைகளில் மாற்றம் செய்யுமாறு அழுத்தம் பிரயோகிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இது தொடர்பில் பொறுத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நம்புகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கு...

2026-01-20 18:30:07
news-image

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள தேசிய கல்வி...

2026-01-20 18:19:13
news-image

இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை...

2026-01-20 17:52:25
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11