ஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் செனானி பகுதியில் அமைந்துள்ள  தாவி ஆற்றுக்கு குறுக்கே  58 மீற்றர் நீளமுள்ள புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. 

இந்த திட்டம் கிராமவாசிகளின் வளர்ச்சி மற்றும் வணிகத்தை எளிதாக்கும் என்று கூறப்படுகின்றது.

சுமார் 62 வருடகால பழைமை வாய்ந்த மரப் பாலம் ஒன்றே அந்த பகுதியில் இதுவரைக்காலமும் காணப்பட்டது.

இது கனரக வாகன போக்குவரத்திற்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. மேலும் அப்பகுதின் வணிக நடவடிக்கைகளுக்கு இந்த பாலமானது நெருக்கடியான விடயமாகவே இருந்துள்ளது.

எனவே 332 இலட்சம் செலவில் அமைக்கப்பெறுகின்ற இந்த புதிய பாலத்தால் 50,000 க்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள். மேலும் இந்த பாலமானது 75 கிராமங்களை இணைக்கிறது.

பல கிராமங்கள் மற்றும் மக்களின் வணிக நடவடிக்கைகளுக் புதிதாக அமைக்கப்படும் இந்த பாலம்பெரும் ஆறுதலாக அமையும் என செனானி நகராட்சி குழுவின் தலைவர் மானிக் குப்தா தெரிவித்தார்.

புதிய பாலம் ஒன்றுக்கான தேவையை மக்கள் பல ஆண்டுகளாக கோரியிருந்தனர். பாலத்தின் குறுக்கே 31,000 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். கிராமங்களில் கை விசையியக்கக் குழாய்கள் நிறுவப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் ஒரு திட்டம் இருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இந்த பாலத்தை மிக விரைவில் ஸ்தாபித்து மக்கள் பயன்பாடுகளுக்கு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.