கொரோனா தொற்றுப் பரவலின் தீவிர நிலைக்காரணமாக, இலங்கை உட்பட முக்கிய சில நாட்டு மக்களுக்காக பிலிப்பைன்ஸ் விதித்துள்ள  பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், ஒமான், பாகிஸ்தான், நேபாளம், மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கே பிலிப்பைன்ஸ் இவ்வாறு பயணத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இலங்கை உள்ளிட்ட மேற்குறித்த நாடுகளில் நிலவுகின்ற கொரோனா நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.