(எம்.மனோசித்ரா)
எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்று அதன் தலைவர் என்.கே.ஜயரத்ன வீரகேசரிக்கு தெரிவித்தார். 

எனினும் பேக்கரி உரிமையாளர்களால் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு அதற்கமைய, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.