மியன்மாருக்கான தனது கொள்கையானது அங்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டு சூழலால் பாதிப்படையவில்லை என்று சீனா கூறுகின்றது.

அத்துடன், நான்கு மாதங்களுக்கு முன்னதாக சதித்திட்டம் ஒன்றினால் அமெரிக்கா உட்பட மேற்குலக  நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு முகங்கொடுக்கும் ஆட்சியொன்றுக்கு ஆதரவளிப்பது முக்கியமானது என்றும் சீனா குறிப்பிடுகின்றது. 

தென்கிழக்கு ஆசிய தேசத்தில் இருதரப்பு திட்டங்களை பெய்ஜிங் தொடர்ந்து செயல்படுத்தும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி செவ்வாயன்று சோங்கிங்கில் நடந்த கூட்டத்தில் மியன்மார் பிரதிநிதியான வுன்னா மவுங் லுவினிடம் தெரிவித்துள்தாக மியன்மார் நாட்டின் தேசிய தொலைக்காட்சியான எம்.ஆர்.டி.வி தெரிவித்துள்ளது.

'மியன்மாருக்கான சீனாவின் இருதரப்பு நட்பு கொள்கையானது  மியன்மாரின் உள் மற்றும் வெளி சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் பாதிக்கப்படுவதில்லை, அக்கொள்கையானது மியான்மர் மக்களை நோக்கியே உள்ளது' என்று சீனாவின் வெளியுறவு அமைச்சின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் 'கடந்த காலங்களில், தற்போதைய மற்றும் எதிர்காலத்தில், சீனா மியன்மாரை அதன் தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற ஒரு வளர்ச்சி பாதையை சுயாதீனமாக தேர்வு செய்ய ஆதரிக்கிறது. அதுமட்டுமன்றி பெய்ஜிங் மியான்மாருக்கு  தொடர்ந்தும் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மற்றத்தின் பின்னரான சூழலில் சர்வதேச நாடுகளிடமிருந்து மியன்மாரின்  ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கமானது அங்கீகாரம் பெற முயல்கிறது, ஏனெனில் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவில் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது நண்பர்கள் அமைக்கப்பட்ட கூட்டு அரசாங்கத்தால் விமர்சனக் கூற்றை எதிர்கொள்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 10 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பிலிருக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு சீனா விருந்தளித்த மறுதினத்தில் மலேசியாவும் சிங்கப்பூரும் மியன்மாரில்  உள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதில் காணப்படும் மெதுவான முன்னேற்றம் குறித்து தமது கரிசனையான கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் ஜின் மார் ஆங், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், அங்கு நிலவுகின்ற ஆட்சியானது இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்றன 'மக்களுடன் மக்களுக்கு' இருக்கும் மக்கள் உறவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அரசாங்கத்தினை சட்டபூர்வம் ஆக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறு' குறிப்பிட்டிருந்தார். 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மியன்மாரில்  ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிந்ததில் இருந்து மியன்மாரின்  பாதுகாப்புப் படையினர் 850 க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்துள்ளனர். அத்துடன் கிட்டத்தட்ட 6,000 பேரைக் கைது செய்துள்ளனர். சூகி உள்ளிட்ட பொதுமக்கள் தலைவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் ஆயுதக் கிளர்ச்சிக் குழுக்களுடன் புதுப்பிக்கப்பட்ட மோதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 

அதேநேரம் ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் பல்வேறுவிதமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.

இந்நிலையில் மியன்மாரில் ஆட்சியில் உள்ள இராணுவ ஆட்சிக்குழுவைத் தண்டிப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு அமெரிக்கா வழிவகுத்தால், ஆசியாவில் மியன்மாரின்  பங்காளிகள் புதிய ஆட்சியாளர்களை அங்கீகரிப்பதில் தயக்கம் காண்பிக்கின்றனர். இவ்வறான நிலையில் மியன்மார் மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்னெடுக்கப்படவிருந்த தடைகளை சீனா தடுத்துள்ளது.

 

ஏப்ரல் மாதத்தில் மியன்மார்  குறித்து ஐந்து அம்சங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பாக  'ஒரு மித்த கருத்தை' எட்டிய ஆசியான் அமைப்புக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் ஆக்கபூர்வமான வகிபாகத்தைக் கொண்டிருப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.

ஆசியாவின் தீர்மானத்தில் 'வன்முறையை உடனடியாக நிறுத்துதல்' என்பதும் உள்ளடங்குகின்றது. இந்த தீர்மானமானது 'மியன்மாரில்  உள்ள அனைத்து தரப்பினரும் அரசியல் உரையாடலில் ஈடுபடவும் ஜனநாயக மாற்றத்தின் செயல்முறையை மீண்டும் தொடங்கவும் ஊக்குவிக்கின்றது' என்று சீனாவின் வெளியுறவு அமைச்சு தனியொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் கடந்த ஆண்டு மியன்மார் தலைநகர் நய்பிடாவிற்கு விஜயம் செய்த பின்னர், பான்-யூரேசியா பட்டி மற்றும் பதை முன்முயற்சியில் பல திட்டங்களை விரைவுபடுத்த சீனாவும் மியன்மாரும்  ஒப்புக்கொண்டன. மேற்கு ராகைன் மாநிலத்தில் பல பில்லியன் டொலர்கள் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் ஆழ்கடல் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான சலுகை மற்றும் பங்குதாரர் ஒப்பந்தமும் அதனுள் உள்ளடங்கியுள்ளது. 

மியான்மரின் முதலீட்டு மற்றும் நிறுவன நிர்வாகத்தின் தரவுகளின்படி, 2016-2017 நிதியாண்டில் 3.5 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள திட்டங்களுடன் மியன்மாரின் இரண்டாவது பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக சீனா உள்ளது.

சீனா ஆதரவு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மியன்மாரின்  நிதி திட்டங்களுக்கு திறந்த வாய்ப்பிருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. வங்கி செய்தித் தொடர்பாளர் லொரல் ஆஸ்ட்ஃபீல்ட் இந்த அறிக்கையை மறுத்திருந்தார். 

எனினும் பத்திரிகையின் துணைத் தலைவர் ஜோச்சிம் வான் ஆம்ஸ்பெர்க் தவறாகக் குறிப்பிட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டி 'மியன்மாருடனான  சீன வெளியுறவுக் கொள்கைக்கும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் முடிவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று ஆஸ்ட்ஃபீல்ட் மின்னஞ்சல் ஊடாக பதிலளித்துள்ளார்.

 

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தினைக் கொண்டுள்ள நாட்டினுடைய இராஜதந்திர ஆதரவின் அடையாளமாக, இராணுவத்தின் தலைமையான மின் ஆங் ஹ்லேங் மியான்மாருக்கான சீனத் தூதரை சந்தித்தார்.

  

இதன்போது, சீன தூதர் சென் ஹை 'மியான்மாருடனான பாரம்பரிய நட்பிற்கு சீனத் தரப்பு எப்போதுமே மிகுந்த அக்கறையுடனும், முக்கியத்துவத்துடனும் இருப்பதை வலியுறுத்தியது' என்று குறிப்பிட்டதாக தூதரகம் சமூக ஊடகமொன்றில் குறிப்பிட்டுள்ளது. 

இது மியன்மாரின் இராணுவ ஆட்சிக்கும், சீனாவின் ஊக்குவிப்பிக்கும் அடிநாதமாக விளங்குகின்றது.