கிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி

Published By: Digital Desk 3

15 Jun, 2021 | 11:33 AM
image

மாகாண சபைகளின் கீழ் நிறுவகிக்கப்படும் தெரிவு செய்யப்பட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழுள்ள தெரிவுசெய்யப்பட்ட மாவட்டப் பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் மேம்படுத்தல் என்ற யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனை ஒன்றை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

அதற்கமைய, தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படுவதும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் நிறுவன வகைப்படுத்தலின் கீழ் காணப்படும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிசாவல்ல, கம்பஹா, மன்னார்,  வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகளின் சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமென இனங்காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய, அந்நோக்கத்தை அடைவதற்காக குறித்த மாவட்ட பொது மருத்துவமனைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சற்று முன்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இணையவழியூடாக நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47