பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு தனிநபரும் நட்டஈடு கோருவதற்கு வாய்ப்பு - நீதி அமைச்சர் அலிசப்ரி

15 Jun, 2021 | 06:48 AM
image

(எம்,ஆர்.எம்.வசீம்)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி அழிவடைந்ததன் மூலம் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் நட்டஈடு கோருவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் அதற்கான நட்டஈட்டு தொகையை பெறுவது தொடர்பான கலந்துரையாடல் நீதி அமைச்சில் நேற்று இடம்பெற்றது. 

கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எப்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் நட்டஈடு பெற்றுக்கொள்வதற்காக, பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து தரப்பினர் தொடர்பாகவும் கலந்துரையாடி வருகின்றோம். 

தற்போது நாங்கள் மே மாதம் 23ஆம் திகதியில் இருந்து ஜூன் மாதம்3ஆம் திகதிவரையான 10நாட்களில் அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட செலவு மற்றும் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் இடைக்கால நட்டஈட்டு தொகை ஒன்றை கோரி இருக்கின்றோம்.

கப்பலில் ஏற்பட்ட தீயினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் பிரதானமாக உரிமை கோரவேண்டியவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக  5 குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், அந்த குழுக்கள் இதுதொடர்பில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. 

அதேபோன்று இதனால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட வெளிநபர்கள் இருக்குமானால் அவர்கள் உரிமைகோரி அதற்காக நட்டஈடு கோருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்ற சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கமைய, அதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். 

அதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் பிரிவொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

மேலும் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் குறித்த நட்டஈட்டு தொகையை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

இதுதொடர்பில்  இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாக, அவர்களின் இரண்டு நிபுணர்கள் எமது நாட்டுக்கு வர இருக்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50