கொரோனாவிற்கு மேலும் ஒரு புதிய தடுப்பூசி அறிமுகம்

Published By: Digital Desk 4

14 Jun, 2021 | 09:32 PM
image

கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த அமெரிக்காவை சார்ந்த நிறுவனம் 'நோவாவாக்ஸ்' என்ற பெயரில் தடுப்பூசி ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இது 90.4  சதவீத செயல்திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

உலகெங்கும் பரவியுள்ள கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா, ஜோன்சன் அண்ட் ஜோன்சன் என மூன்று தடுப்பூசிகள் அவசரகால பயன்பாடு என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த நோவாவாக்ஸ் என்ற நிறுவனம் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் சுமார் 30,000 நபர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான மற்றும் தீவிரமான கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து 100% பாதுகாப்பு அளிக்கும் என்றும், 90.4 சதவீத செயல்திறன் கொண்டது என்றும், உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தற்போதைய சூழலில் தடுப்பூசிக்கான தேவை குறைந்திருக்கிறது. இருப்பினும் பல சர்வதேச நாடுகளில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்திருக்கிறது. எனவே அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி கிடைத்தவுடன் உலகிலுள்ள வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகளை விற்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நோவாவாக்ஸ் தடுப்பூசியை இருப்பு வைப்பதும், எடுத்துச் செல்வதும் எளிது எனவும், இந்த தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது உலக அளவில் கொவிஷீல்ட், கொவாக்சின்,  சினோபார்ம்,  ஸ்புட்னிக் வி, ஃபைசர், மாடர்னா, ஜோன்சன் அண்ட் ஜோன்சன் என பல வகையான தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டில் உள்ளன. மேலும் சில தடுப்பூசிகள் ஆய்வு நிலையில் உள்ளன. அத்துடன் பல நாடுகள் கொரோனா தொற்றுக்கு ஒரே டோஸ் அளவிலான தடுப்பூசியை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு இருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, 'நோவாவாக்ஸ்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தவிருக்கும் கொரோனா தடுப்பூசி வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொக்டர் அருண்குமார்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஃபோர்மில்க் டயரியா' எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-03-26 15:27:52
news-image

இன்சுலின் செலுத்திக்கொள்வதால் பக்க விளைவு உண்டாகுமா?

2025-03-25 15:50:06
news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15