நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் திருச்செல்வத்தின் நிதியில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 

இரத்தினபுரி அப்புகெஸ்தென்ன, கலபட  தோட்டம்,  வெவல்வத்த ஆகிய தோட்டங்களில் உள்ள சமய தலங்களில் குருக்கள் மார்களுக்கும், தேவாலயங்களின்  பங்குத்தந்தைமார்களுக்கும் , பள்ளிவாசல் மௌலவி மற்றும் விகாரை விகாரதிபதி ஆகியோர் உள்ளிட்ட 50 குடும்பங்களுக்கான  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.