நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக  பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, 14 மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபை மற்றும் சோமரத்ன டிரஸ்ட் ஆகியன இணைந்து வழங்கின. 

அவற்றில் 450 நிவாரணப் பொதிகள் அண்மையில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொருட்டு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் உத்தியோகபூர்வமாக ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. பெ. சுந்தரலிங்கத்தால் கையளிக்கப்பட்டன.

அத்துடன் மயூரா பிளேஸ் பிரதேசத்தில் வசிக்கும் 250 குடும்பங்களுக்கும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளி பேணப்பட்டு இன்று உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் அமைச்சர் சரத் வீரசேகர, ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. பெ. சுந்தரலிங்கம், சோமரத்ன ட்ரஸ்ட் சார்பாக திரு. அனுர சோமரத்ன மற்றும் திரு. அசோக சோமரத்ன ஆகியோர் பொருட்கள் வழங்குவதைப் படங்களில் காணலாம்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்