(எம்.மனோசித்ரா)
வாரியப்பொல பிரதேசத்தில் விவசாயிகளுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட உரத்தினை தனது பிரத்தியேக விற்பனை நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்த வாரியப்பொல விவசாய சேவைகள் அபிவிருத்தி அலுவலகத்தில் அபிவிருத்தி அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
1500 ரூபா என்ற நிவாரண விலையில் குறித்த உரத்தினை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 50 உர மூட்டைகளை எடுத்துச் சென்று தனது பிரத்தியேக விற்பனை நிலையத்தில் குறித்த அபிவிருத்தி அதிகாரி விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
விவசாயிகளுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட உரத்தினை அதிக விலைக்கு விற்பனை செய்தமை மற்றும் ஊழல் செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாரியபொல பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM