(எம்.மனோசித்ரா)
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்று கஞ்சா கொண்டு சென்றமை மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் நாட்டின் பல பகுதிகளிலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கல்கமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேகத்திற்கிடமாக பயணித்த லொறியொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கோழி மற்றும் முட்டைகளை கொண்டு செல்லும் பாங்கில் இவ்வாறு கஞ்சா தொகை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கோழி மற்றும் முட்டைகளைக் கொண்டு செல்வதற்காக மன்னார் மாவட்ட அதிபரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு குறித்த லொறியில் இவ்வாறு கஞ்சா தொகை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்று கஞ்சா கொண்டு சென்றமை தொடர்பில் 56 வயதுடைய குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை வேயங்கொட பிரதேசத்தில் 5 கிராம் ஹெரோயினுடன் 41 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு , இவரிடமிருந்து 18,480 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீகொட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் கல்கிஸை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றா விசாரணைப்பிரிவினரால் கிராண்பாஸ் - பாபாபுள்ளே பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 10 கிராம் ஹெரோயினுடன் பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 90,100 ரூபா பணமும் மீட்க்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பொலிஸாரால் 3 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM