(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. அதற்கமைய நேற்று சனிக்கிழமையும் 63 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.
இவ்வாறு நேற்று உறுதிப்படுத்தப்பட்டவற்றில் 12 மரணங்கள் மே மாதம் 23 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையும் , 51 மரணங்கள் இம்மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையும் பதிவானவையாகும்.
கொவிட் தொற்றின் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 33 ஆண்களும் , 30 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதற்கமைய நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 2136 ஆக உயர்வடைந்துள்ளது.
லுனுவத்தை, பண்டாரவளை, காலி, திஸ்ஸாவௌ, வென்னப்புவ, அழுத்மல்கட்டுவாவ, நாரம்மல, வாரியபொல, குடாகல்கமுவ, போயகனே, ரிதீகம, மடஹபொல, புப்போகம, மொரட்டுவை, தன்னாமுனை, புலத்சிங்கள, வெள்ளவத்தை, பிலியந்தல, கோட்டை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதே வேளை இன்று ஞாயிறுக்கிழமை 2,329 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்மைய இதுவரையில் நாட்டில் 223 606 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளர்.
இவர்களில் 188 547 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 32 480 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM