நாடு கடத்தப்படும் உய்குர்களின்  எதிர்காலம் !

By T Yuwaraj

13 Jun, 2021 | 09:31 PM
image

உய்குர்கள் மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவின் பொதுப் பகுதியிலிருந்து வழிவந்தும் இஸ்லாமிய மத கலாசாரத்தை தழுவியதொரு துருக்கிய இனக்குழுவாகும். வட மேற்கு சீனாவில் உள்ள ஷின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தை தமது பூர்வீகமாக உய்குர்கள் அங்கீகரிக்கின்றனர்.

சீன ஆக்கரமிப்பால் பாக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர்ந்த குறித்த இனக்குழு குறித்து தெற்காசிய கற்கைகளுக்கான ஐரோப்பிய மன்றம் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், பாக்கிஸ்தானில் மேலோங்கியுள்ள சீனாவின் ஆதிக்கத்தால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ள  உய்குர் மக்களின் நீதிக்கான உல பொறுப்பை வலியுறுத்துகின்றது.  

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து சிறந்த குரல் கொடுப்பவராக பாக்கிஸ்தான் திகழ்கின்றது. இந்த ஆதரவு உண்மையானதும் கூட, ஏனெனில் தொலைதூர நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான தவறுகளின் கருத்தில் கொண்டு பாக்கிஸ்தானின் உரிமைக்குரல் அளவிடப்படுகின்றது. 2107 ஆம் ஆண்டில் இம்ரான் கான் பிரதமரானதிலிருந்து இஸ்லாமிய நம்பிக்கையின் பிரதான பாதுகாவலராக தன்னை நிறுத்த பாக்கிஸ்தான் முயற்சித்துள்ளது. இதனை தனிப்பட்ட ரீதியல் வழி நடத்தும் வகையில் இஸ்ரேல் -  பாலஸ்தீன மோதலை மையப்படுத்தி  பாலஸ்தீனத்துக்கு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி டுவிட் பதிவுகளை பிரதமர் இம்ரான் கான்  மேற்கொண்டிருந்தமை அண்மைகால உதாரணமாகும். பாலஸ்தீனத்துடனா ஒற்றுமையின் இந்த வெளிப்பாடு நியாயமானதும் ஏற்றுக்கொள்ள கூடியதுமாகும்.

ஆனால் மேற்குலக முஸ்லிம்களின் உரிமை மீறல்கள் அல்லது அவமதிப்புகள் போன்வற்றுக்கு பாக்கிஸ்தானின் கூர்மையான எதிர்வினைகள் முற்றிலும் வேறு திசையை வெளிப்படுத்தி நிக்கின்றது. பாலஸ்தீன விவகாரத்தை சுட்டிக்காட்டி அண்மையில் பாக்கிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தில் இம்பெற்ற விவாதத்தின் போது இஸ்ரேல் மீது ஜிஹாத் போராட்டத்தையும் அணு குண்டுகளை வீசவும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பாலஸ்தீனத்தையும் காஷ்மீரையும் விடுவிக்க முடியாது என்றால் 700000 பேர் கொண்ட இரணுவம் எதற்கு என  இந்த விவாதத்தின் போது ஜமாத் - இ - இஸ்லாமிய கட்சியின் மௌலானா அப்துல் அக்பர் சித்ராலி பாக்கிஸ்தான் இராணுவ தளபதியை நோக்கி கேள்வி எழுப்பினார். இஸ்ரேலுக்கு எதிரான ஆத்திரமூட்டும் இத்தகைய இராணுவ அச்சுறுத்தல்கள் உண்மையில் அர்த்தமற்ற வெற்று வார்த்தைகளாக இருந்தாலும் கூட அவை பாலஸ்தீனத்திற்கு பயனளிக்கின்றதா ? இல்லையா ? என்பது தெளிவற்ற சிந்தனையாகவே உள்ளது.

தொலைத்தூர  நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடம் பாக்கிஸ்தானின் அனுதாப மனப்பான்மை என்பது தற்செயல் நிகழ்வல்ல, மாறாக தொலைதூர நாடுகளில் வாழும் முஸ்லிம்களை நோக்கிய உடனடி கருதுகோலாகவே வெளிப்படுகின்றது. அத்தகைய கொள்கைகளை பின்பற்றுகின்றமை மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகளுக்கு வழிவகுக்கின்றது. மறுப்புறம் அயல் நாடுகளிலுள்ள முஸ்லிம்களை தனது சொந்த மூவோபாய நோக்கங்களை நிறைவேற்ற பயன்படுத்துவதாகவும் உள்ளது.

ஆப்கானிஸ்தானில், சோவியத்துகளை வெளியேற்றுவதற்காக அமெரிக்காவுடனான கூட்டாண்மையுடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைளில் பல்லாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பாக்கிஸ்தான பொறுப்பேற்றதுடன், தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வேர்க் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுடனான தொடர்புகளும் தொடர்கின்றது. இதே வேளை ஜம்மு - காஷ்மீரில்இளைஞர்களை பயங்கரவாதிகளாக உருவாக்க பாக்கிஸ்தான் மதத்தை துஷ்பிரயோகம் செய்தது. இவ்வாறான செயற்பாடுகள் ஜம்மு - காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்குள் நீண்காலமாக வைத்திருந்த சிறப்பு அந்தஸ்தையும் சுயாட்சியையும் இழக்க செய்துள்ளது.

சீனாவின் சிஞ்சியாங்கில்  துன்புறுத்தப்பட்ட உய்குர்களை பாகிஸ்தான் நடத்துவது வேறுப்பட்ட தன்மை கொண்டது. இந்த விடயத்தில் பாக்கிஸ்தான் அடிப்பணிய யுவானின் கவர்ச்சியே காரணமாகும். பாக்கிஸ்தானில் வாழும் உய்குர் அகதிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் , சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல் நூற்றுக்கணக்கானவரகளை சீனாவுக்கு நாடு கடத்துவது போன்ற விடயங்கள் நம்பிக்கையற்ற நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. 1950 களிலிருந்து சீனாவுடன் பாக்கிஸ்தான் மாறிவரும் சமன்பாடுகள் மற்றும் சீன - பாக்கிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் உறவின் மீது ஏற்படுத்திய தாக்கம் என்பன  உய்குர்களின் தலைவிதியை பாக்கிஸ்தானில் மாற்றியுள்ளது.  1950 - 1970 களில் பாக்கிஸ்தானுக்கு குடியேறிய உய்குர் குடிகளின் மூதாதையர்களுக்கு அரசியலமைப்பில் உரிமைகளும் ஏனைய மகிச்சிக்குறிய விடயங்களும் கிடைத்தன. பாக்கிஸ்தானிய சமூகத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்க உய்குர் குடிகள் அனுமதிக்கப்பட்டனர். சரளமாக உருது மொழி பேசவும் பாக்கிஸ்தானிய பாரம்பரிய ஆடைகளை அணிந்தும் உய்குர் குடிகள் வாழ்ந்தனர். இஸ்லாமாபாத் மீதான பெய்ஜிங்கின் வளர்ந்து வரும் செல்வாக்கு உய்குர் குடிகளின் இருப்பை கேள்விக்குறியாக்கி துன்புறுத்தலை கடினமாக்கியுள்ளது.

உய்குர் குடிகளின் தற்போதைய நிலைமை மிகவும் அவதானமிக்கதாக காணப்படுவதுடன், ஊடகங்கள் மற்றும் இராஜதந்திரிகள் இந்த விடயம் குறித்து பல்வேறு ஆய்வறிக்கைகளை முன்வைத்துள்ளனர். சீனாவுக்கு நாடு கடத்தப்படும் நூற்றுக்கணக்கான உய்குர்களின் உயிர்களுக்கு எந்தளவு பாக்கிஸ்தானால் உத்தரவாமளிக்க முடியும். இஸ்லாமிய காரணத்துடன் தன்னை உலகளவில் இணைத்துக்கொள்ள முற்படும் பாக்கிஸ்தானால் உய்குர்கள் குறித்த தமது செயற்பாட்டை நியாயப்படுத்த முடியவில்லை. உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை க்கு எதிராக செயற்படும் போது,பாக்கிஸ்தானில் உய்குர் குடிகளுக்கு ஏற்படும் திட்டமிட்ட சதிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டாமா ?

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட மாயாஜால உலகமிது !

2022-10-01 21:39:07
news-image

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் கடுமையான...

2022-10-01 12:53:46
news-image

இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக...

2022-09-29 15:08:23
news-image

யார் இந்த பொன்னியின் செல்வன்?

2022-09-29 15:25:42
news-image

முதல் முறையாக விண்கல்லை திசை திருப்பிய...

2022-09-29 13:18:27
news-image

உடையால் பற்றி எரியும் ஈராக் :...

2022-09-29 13:18:49
news-image

கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

2022-09-29 12:26:33
news-image

மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

2022-09-29 12:26:16
news-image

சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல்...

2022-09-28 12:40:54
news-image

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

2022-09-28 10:14:28
news-image

மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின்...

2022-09-28 10:10:48
news-image

அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும்...

2022-09-27 09:27:02