அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வீழ்த்த வெளிப்படையான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நேரிடும்: த.தே.கூ எச்சரிக்கை..!

Published By: J.G.Stephan

13 Jun, 2021 | 05:06 PM
image

(ஆர்.யசி)
கொவிட் -19 வைரஸ் இடர் காலத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் செய்யும் முறையற்ற ஆட்சியை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசாங்கம் தமது தவறுகளை உடனடியாக திருத்திக்கொள்ளாது போனால்,  அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் இருந்து வீழ்த்தும் அனைத்து வேலைத்திட்டத்தையும் சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து  வெளிப்படையாகவே முன்னெடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிக மோசமானதாக அமைந்துள்ளது. மக்கள் குறித்த எந்தவித அக்கறையும் இல்லாது ஆட்சியாளர்கள் செயற்பட்டுக்கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாது, தடுப்புக்காவலில் உள்ளவர்கள் கொல்லப்படும் நிலை உருவாகியுள்ளது. மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன. இவற்றுக்கு மத்தியில் கொவிட் நிலைமைகளை உபயோகித்து தமக்கு ஏற்ற வகையில் நிலைமைகளை கையாள்கின்ற காரணத்தினால் பாரிய மனித உரிமை மீறலையும் அரசாங்கம் செய்து வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக அரசாங்கம் மக்களின் செல்வாக்கை முற்று முழுதாக இழக்கும் நிலை உருவாகியுள்ளது என்பது தெளிவாக விளங்குகின்றது.

எனவே எதிர்கட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாம், ஏனைய பிரதான எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எச்சரிக்கையை விடுக்கின்றோம். அரசாங்கம் சரியான முறையில் ஆட்சி செய்யவில்லை. இது மக்கள் ஆட்சியெனவும்  ஜனநாயக குடியரசு எனவும் சமத்துவ குடியரசு எனவும் எமது அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள போதிலும் இதற்கு பொருந்தாத ஆட்சியை அரசாங்கம் செய்கின்றது. எனவே இது தொடருமானால் அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் இருந்து வீழ்த்தும் அனைத்து வேலைத்திட்டத்தையும் வெளிப்படையாக முன்னெடுப்போம். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், ஜே.வி.பியின் தலைவர் ஆகியோரும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனாலேயே நாமும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

மேலும், குடும்ப ஆட்சி இருக்கவே கூடாது. ஒரு குடும்பத்தில் இருவர் ஆட்சியில் இருந்தாலே அது நல்லாட்சி தத்துவத்திற்கு மாறானது. ஆனால் இங்கே பதினாறு, பதினேழு அமைச்சுக்கள் ஒரே குடும்பத்தின் கையில் உள்ளன. ஆகவே இந்த குடும்ப ஆட்சி தொடரக்கூடாது. குறிப்பாக இந்த இடர் காலத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்கள் செய்யும் முறையற்ற ஆட்சி நிறுத்தப்பட வேண்டும்  எனவும் அவர் கூறியிருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் உறுதியளித்தார்...

2024-06-22 22:11:18
news-image

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024-06-22 22:22:37
news-image

அரசாங்கமும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத கட்சியும்...

2024-06-22 16:47:00
news-image

போதைப்பொருட்களுடன் 536 பேர் கைது

2024-06-22 22:12:51
news-image

இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து ;...

2024-06-22 22:21:27
news-image

தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளை இந்திய...

2024-06-22 16:58:15
news-image

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த கொழும்புவாசி கைது...

2024-06-22 18:26:32
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த வாழைத்தோட்டம்...

2024-06-22 16:49:56
news-image

நோயாளியின் மோதிரம், சிறுதொகைப் பணம், கைப்பை...

2024-06-22 18:49:06
news-image

திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் கமோர்டா...

2024-06-22 22:24:50
news-image

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பயிர்கள், உடைமைகளை...

2024-06-22 16:55:38
news-image

பதுளையில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2024-06-22 16:51:52