சுபத்ரா

அமெரிக்க காங்கிரஸில் ஜனநாயக கட்சி உறுப்பினர் டெபோரா ரொஸ், மே மாதம் 18ஆம் திகதி சமர்ப்பித்திருந்த, இலங்கை தொடர்பான H.Res.413 என்ற பிரேரணை வலுப் பெற்று வருகின்றது.

காங்கிரஸ் உறுப்பினர்களான பில் ஜோன்சன், டனி டேவிஸ், பிராட் ஷேர்மன், கதி மன்னிங் ஆகியோரும் பிரதான அனுசரணையாளர்களாக அதில் இடம்பெற்றிருந்தனர்.

பின்னர் டேவிட் சிசிலின் மற்றும் நிகோல் மலியோராகிஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்கள் கடந்த 28ஆம் திகதி அனுசரணை வழங்கியிருந்தனர்.

வெளிவிவகாரக் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்ட இந்தப் பிரேரணை, தற்போது, ஆசிய, பசுபிக் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணைக் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி ஜனநாயக கட்சியின் ரொம் மாலினோவ்ஸ்கி, கரோலின் போர்டோக்ஸ், பொன்னி வட்சன் கோல்மன் ஆகிய மூன்று காங்கிரஸ் உறுப்பினர்களும் இந்தப் பிரேரணைக்கு அனுசரணை வழங்கியுள்ளனர்.

இவர்களில் நியூஜேர்சி உறுப்பினரான ரொம் மாலினோவ்ஸ்கி, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றியவர்.

2015 இல் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு, முள்ளிவாய்க்காலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டுள்ள – இலங்கை அரசாங்கத்தினால் கடுமையாக எதிர்க்கப்படுகின்ற இந்தப் பிரேரணைக்கு இப்போது காங்கிரஸின் மொத்தம் 10 உறுப்பினர்கள் அனுசரணை வழங்கியிருக்கிறார்கள். 

இந்தப் பிரேரணைக்கு அனுசரணை வழங்கும் விடயத்தில் ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி என்ற வேறுபாடும் இருக்கவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக் https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-13#page-13

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.