இலங்கை மற்றும்  ஆஸி அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸி அணி 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (28) தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் பகலிரவு போட்டியாக இந்த போட்டி இடம்பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 பந்து ஓவர்களில் 226 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் 130 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய திலகரட்ண டில்ஷான் 65 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

ஆஸி அணி சார்பில் அடெம் சம்பா 38 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி ஆஸி அணி 46 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

ஆஸி அணி சார்பில் ஜோர்ஜ் பெய்லி 99 பந்துகளுக்கு 70 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணி சார்பில் அமில அபோன்ஷோ, டில்ருவான் பெரேரா மற்றும் எஞ்சலோ மெத்தியுஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஜோர்ஜ் பெய்லி தெரிவுசெய்யப்பட்டார்.

ஒருநாள் தொடரில் ஆஸி  அணி 2-1 என முன்னிலை வகிக்கின்றது.