என்.கண்ணன்

 “போலிச் செய்திகள் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை தான், ஆனால், அதற்காக சமூக ஊடகங்களின் சுதந்திரத்தின் மீது தலையீடு செய்வதோ, அவற்றைக் கட்டுப்படுத்துவதோ தவறானது”

“போர்க்காலத்தில் போலிச் செய்திப் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்திய அரசாங்கம் தான், இப்போது சமூக ஊடகங்களின் போலிச் செய்திகளை களையெடுப்பது என்ற பெயரில் மாற்றுக் கொள்கைகளையும், விமர்சனங்களையும் ஒடுக்க முனைகிறது”

  

கிட்டத்தட்ட ஒன்றை தசாப்தங்களுக்கு முன்னர், சமூக ஊடகங்கள் தோன்ற ஆரம்பித்த போது, தகவல் தொடர்பின் திருப்பு முனையாகவும், முக்கியமான தகவல் புரட்சியாகவும்  பார்க்கப்பட்டது.

அப்போது, சமூக ஊடகங்களின் சாதக தன்மை குறித்து எல்லோரும் சிந்தித்தனர். நேர்மறையான சிந்தனை மட்டுமே அப்போது காணப்பட்டது.

அதில், வியாபார தந்திரங்களோ நோக்கங்களோ அப்போது இனங்காணப்படவில்லை.

இப்போது அதன் பாதகங்கள் குறித்தே, எதிர்மறையான போக்குகள் குறித்தே கவனம் செலுத்தப்படுகிறது. கவலை கொள்ளப்படுகிறது.

அதற்குக் காரணம் சமூக ஊடகங்கள் இப்போது போலிகளாலும் பொய்களாலும் நிரம்பியிருக்கின்றன.

வியாபாரத்துக்காக, இலாப நோக்கத்துக்காக எந்தப் பொய்யையும், எந்தளவுக்கும் சென்று சந்தைப்படுத்தலாம் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், மக்களின் அறிவையும், சமூகத் தொடர்பையும் வலுப்படுத்தக் கூடிய ஒரு வலிமையான ஆயுதமான சமூக ஊடகங்களை, முடக்குவதற்கும் அதனைக் கட்டுப்படுத்துவதற்குமான சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

தேர்தல் காலங்களிலும், தொற்றுப் பரவல் காலங்களிலும், அரசியல் நெருக்கடிகள் மலிந்த காலங்களிலும் சமூக ஊடகங்களின் பயன்பாடு, நம்பத்தகுந்தவையாகவோ, திருப்தி அளிக்க கூடிய வகையிலோ இருக்கவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-13#page-11

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.