எம்.எஸ்.தீன் 

முஸ்லிம்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களின் விவகாரங்களில் கவனம் செலுத்துவதில்லை. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சிகள் எதுவுமின்றியே பல விடயங்கள் முஸ்லிம்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

  

அதற்கு அரசாங்கமும், அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களும் காரணமாகும். ஆனால், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு தானாக நடந்துகொண்டிருக்கும் இத்தகையநல்ல விடயங்களுக்கு  நாங்கள் தான் காரணம் என்று ஆளுக்காள் போட்டியிட்டுக் கொண்டு உரிமை கொண்டாடும் வங்குரோத்து அரசியலை மேற்கொண்டு வருகின்றார்கள். 

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசத்தில் எந்த நிர்மாணத்தைச் என்ற கணிப்பீட்டிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றர்கள்.

  

நிர்மாணங்களை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. நல்ல அனுபவமுள்ள கொந்தராத்துக்காரர்களினால் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள், அதிகாரிகளின் துணையுடன் அமைக்க முடியும். ஆனால், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் சமூகத்தின் உரிமைகளையும், முதன்மைத் தேவைகளையும் மறந்து தமது சுயலாப சிந்தனையில் தற்போது நீந்திக் கொண்டிருக்கின்றார்கள். 

கொரோனா தொற்றால் மரணித்த முஸ்லிம்களை தகனம் செய்த போது, 20 இற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் எங்களை ஏமாற்றி விட்டதென்று பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். 

பின்னர் சகோதர இன பாராளுமன்ற உறுப்பினர்களும், சர்வதேச நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டு மென்று அழுத்தங்களை கொடுத்த போது அரசாங்கம் அதற்கு அனுமதித்தது.

இதன் பின்னர் ஜனாஸாக்களின் அடக்கத்திற்கு நாங்கள் தான் காரணமென்றும், 20 இற்கு ஆதரவு வழங்கும் போது இந்த நிபந்தனையை முன் வைத்தோம் என்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டார்கள். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-13#page-10

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.