புத்தளம், கருவெலகஸ்வெவ பகுதியில் இரண்டு பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த காட்டு யானையை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கடந்த சனிக்கிழமை வான் வண்டியொன்றை காட்டு யானை ஒன்று தாக்கியதில் 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் கயாமடைந்திருந்தனர்.

இதன்படி காட்டு யானை வான் வண்டியை தாக்கிய பின்னர் சென்ற பிரதேசத்தை தேடி வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகள் தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.