'கௌரவ கொலையினால்' அதிர்ந்து போன இத்தாலி..! 

Published By: Digital Desk 8

13 Jun, 2021 | 10:11 AM
image

இத்தாலி மக்களை பேரதிச்சிக்குள் ஆழ்த்தியுள்ள கௌரவ கொலை தொடர்பான  வழக்கின் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை தேடி அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

ரெஜியா - எமிலியா என்ற நகரிலுள்ள பண்ணையில் பெண்ணின் தந்தையான ஷாபர் பணி புரிந்த நிலையில் மே 1 ஆம் திகதி இறுதியாக சி.சி.டி.வி யில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் சமன் அப்பாஸ் என் பெண் காணப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்ட 18 வயதுடைய சமன் அபாஸ் என்ற இளம் பெண்ணை அவரது குடும்பத்தாருடன் இணைந்து மாமா முறையிலான ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்டாய திருமணத்தை மறுத்தமையே இந்த கொலைக்கு காரணம் என பொலிசார் தற்போது சந்தேகிக்கின்றனர். இதே வேளை கொலை செய்யப்பட்ட பெண், அருகில் உள்ள வயல் வெளியில் புதைத்திருக்கலாம் என அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாக்கிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த குறித்த சந்தேக நபரும் அவரது குடும்பத்தாரும் இத்தாலியில் வாழ்ந்து வந்த நிலையிலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் சம்பத்தின் பின்னர் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் வீட்டாருடன் முரண்பட்டு வெளியேறியுள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்ற நபர் மத்திய இத்தாலியின் ரெஜியோ - எமிலியா பகுதிக்கு  வசிக்க சென்றிருந்த போது தனது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியதிருந்தது. இதனால் மீண்டும் வீடு திரும்பி ஆவணங்களை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஏப்ரல் 26 ஆம் திகதிக்கு முன்னரே கொலை  குறித்து திட்டமிடப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும் கொலை சந்தேகத்தின் பேரில் இஜாஸ் என்பவர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். பெற்றோர்களான ஷப்பர் மற்றும் நாசியா ஆகியோர் பாக்கிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் கொலையை மறுத்துள்ளனர். மேலும் இருவரான ஹஸ்னைன் மற்றும் நோமானுல்ஹக் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ;...

2026-03-17 12:28:43
news-image

கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும்...

2026-03-17 11:34:51
news-image

பாகிஸ்தான்–ஆப்கான் பதற்றம் தீவிரம்: காபுலில் 400...

2026-03-17 10:16:40
news-image

லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ நெருங்குகிறது

2026-03-17 06:06:30
news-image

அவுஸ்திரேலியாவுக்கும் எரிபொருள் நெருக்கடி?

2026-03-17 10:07:37
news-image

கர்வாரில் நீர்மூழ்கிக் கப்பல் RAM சோதனை...

2026-03-16 17:08:07
news-image

பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி...

2026-03-16 16:40:43
news-image

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத்...

2026-03-16 16:40:17
news-image

இந்தியாவில் வைத்தியசாலையில் தீ விபத்து ;...

2026-03-16 15:51:55
news-image

சில விமான பயணங்களை மீண்டும் இயக்குகிறது...

2026-03-16 15:21:35
news-image

போர் வேண்டாம் ; சுதந்திர பாலஸ்தீனம்...

2026-03-16 13:12:57
news-image

ஹோர்முஸ் நீரிணையை மீள திறக்க ட்ரம்ப்...

2026-03-16 12:02:03