டெக்சாஸ் நகரத்தின் ஆஸ்டின் நகரில் ஒரே இரவில் நடந்த வெகுஜன துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்ததாக ஆஸ்டின் மேயர் ஸ்டீவ் அட்லரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஆஸ்டின் இடைக்கால காவல்துறைத் தலைவர் ஜோசப் சாகோன் சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட சூழ்நிலையைச் சுற்றியுள்ள எந்த தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான இரு ஆண் சந்தேக நபர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகவும், இது இரு தரப்பினருக்கும் இடையிலான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும் அவர் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் (06:30 GMT) இந்த துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.