செ.தேன்மொழி

வெல்லம்பிட்டி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹிலவத்தை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஹிலவத்தை பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 7 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் அவரை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக நடவடிக்கையினை எடுத்து வருவதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.