கார்னியா என்பது கைகளில் உள்ள கைகடிகாரங்களில் மீது இருக்கும் கண்ணாடியை போன்றது. இது தான் வெளிச்சத்தை கண்களுக்குள் அனுமதிக்கும் முதல் படி. இவை தெளிந்த தண்ணீரைப்போல இருக்கும். இது தன் தன்மைய இழந்துவிட்டால் வெண்மையாக மாறிவிடும். நாம் எம்முடைய கருவிழியை கரு விழி என்று சொன்னாலும் அவை கருப்பாக இருக்காது. தெளிந்த தண்ணீரைப் போல்தான் இருக்கும். அதனுடன் இணைந்து இருக்கும் ஐரீஸால் தான் கருவிழி நீலமாகவோ பிரவுனாகவோ அல்லது பச்சையாகவோ தெரிகிறது. இதனுடைய வெளிப்படைத்தன்மை தளர்ந்துவிட்டால் அதனைத்தான் கார்னியல் பிளைண்ட்னஸ் என்று குறிப்பிடுகிறோம்.

இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கு கருவிழியில் ஏற்படும் புண்கள். தொற்றுகள், மரபு ரீதியாக வரக்கூடிய பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக இவை ஏற்படும். ஒரு சிலருக்கு தான் அவர்களுக்கே அறியாமல் இவை சிறுக சிறுக தேய்ந்து கூம்பு வடிவத்திற்கு மாறிவிடும். அதேபோல ஒரு சிலருக்கு கண்புரைக்கான ஆபரேசனுக்கு பிறகு கருவிழி பாதிக்கப்படலாம். எதுவாகயிருந்தாலும் கருவிழி பாதிக்கப்பட்டால் அதற்கு மாற்று கருவிழி பொருத்துவதுதான் சிறந்த தீர்வாகவும், சிறந்த சிகிச்சையாகவும் இருக்கும்.

அதேபோல் தற்போ கருவிழியை மாற்றியமைப்பதிலும் நவீன உத்திகள் வந்துவிட்டது. கருவிழியில் இருக்கும் மூன்று லேயர்களில் எந்த லேயர் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அதை மட்டுமே மாற்றியமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

டொக்டர் L. ராஜ்., M B B S., D.O., 

தொகுப்பு அனுஷா

தகவல் : சென்னை அலுவலகம்