இலங்கையுடனான உறவு குறித்து சீன தூதுவர் விளக்கம்

Published By: Digital Desk 4

11 Jun, 2021 | 09:46 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் சீனா எப்போதுமே முந்தி வந்து உதவியளிக்க தவறியதில்லை.

எத்தகைய நிலைமையில் இருந்தாலும், எத்தகைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமையை எதிர்கொண்டாலும், இலங்கையுடன் நேர்மையுடனும் நம்பகத்தன்மையுடனுமே உள்ளதாக சீன தூதுவர்கியூ ஷெங்வொங் தெரிவித்தார்.  

BRISL on Twitter: "Greeting message by Ambassador Qi Zhenhong on his  arrival at Colombo as the new Chinese ambassador to Sri Lanka.… "

பொலன்னறுவையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனையை அங்குரார்ப்பனம் செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே, இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சீன தூதுவர் மெற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கை மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த நல்ல நாள் இன்றாகும். சீன - இலங்கை உறவின் வரலாற்றில் பதிவு செய்யத்தக்க நல்ல நாளும் இதுவாகும்.

கொவிட் -19 நோய் தொற்று கடுமையாக இருக்கும் பின்னணியில், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான பொலன்னறுவையில் சீன - இலங்கை நட்பு மருத்துவனை ஸ்தாபிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இதுவென்பது முக்கியமான விடயமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பும் பல்வகை இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றன. அதில் முக்கியமானதொன்றாக கொவிட்-19  பாதிப்பை கூறுவதுடன் இரு நாடுகளும் வெற்றிகரமாக எதிர்கொள்கின்றன.

இந்நிலையில் இரு நாடுகளுமே கையோடு கைகோர்த்து ஒத்துழைத்தன் விளைவாக இந்த அதிநவீன சிறப்பு மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவதென்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆயிரக்கணக்கான சிறுநீரக நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு நம்பிக்கை தருகிறது.

மூன்றாவதாக, இம்மருத்துவமனை தெற்காசியாவில் உள்ள 175 கோடி மக்களுக்கு நன்மை கொண்டு வரும். சீன - இலங்கை நட்புறவின் புதிய அடையாளமாக விளங்கும் இம்மருத்துவமனை, சீன உதவியுடன் கட்டப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், உச்ச நீதிமன்றக் கட்டிடம், தேசியக் கலை அரங்கு, கண்டி - நீர்த் தொழில் நுட்ப ஆய்வுக்கான செயல்விளக்க மையம் போன்ற திட்டப்பணிகளைப் போல் வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் சீனா எப்போதுமே முந்தி வந்து உதவியளிக்க தவறியதில்லை. இருநாட்டுத் இராஜதந்திர உறவு நிறுவப்பட்ட 64 ஆண்டுகளில், சீனா எத்தகு நிலைமையில் இருந்தாலும், எத்தகைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமையை எதிர்கொண்டாலும், இலங்கையுடன் நேர்மையாகப் பழகி, சமத்துவ நிலையில் ஒன்றுக்கொன்று நம்பிக்கை தந்து, ஒத்துழைப்புடன் இன்னல்களில் ஒத்துழைப்பு வழங்குகின்றது.

தற்போது வரை, சீனாவின் உதவியுடன் இலங்கையில் கட்டிமுடிக்கப்பட்ட மற்றும் கட்டுமானத்தில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கை 116 ஆகும்.   இதன் பொருட்டுப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 8000 பேருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உள்ளுர் அரசுகள், தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பல்வேறு வழிமுறைகளின் மூலம் இலங்கையின் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளித்து வருவதாக தெரிவித்தார்.

கோவிட்-19 நோய் பரவலுக்குப் பிந்தைய பல்வேறு கட்டங்களிலும், சீன அரசு இலங்கைக்கு அவசர உதவியை வழங்கியது.  கோடிக்கும் மேற்பட்ட தனிநபர் பாதுகாப்புச் சாதனங்கள், இலட்சத்துக்கும் மேலான நியூக்ளிக் அமிலச் சோதனை கருவிகள் வழங்கப்பட்டன.

இவை தவிர, 11 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளைச் சீனா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும், கரோனா தடுப்பூசிகளை வணிகக் கொள்வனவு செய்வதிலும், உள்ளூரில் சீனத் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும் சீனா இலங்கைக்கு இயன்ற அளவில் உதவியளித்து வருகிறது. இருநாட்டு அரசு மற்றும் மக்களின் கூட்டு முயற்சியுடன், புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம். சீன - இலங்கை நட்புறவு போராட்டத்தில் மேலும் உயர் நிலையை எட்டி இருநாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைக் கொண்டு வர முடியும் என நம்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 16:08:18
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி...

2026-09-07 16:01:44
news-image

சுற்றுச்சூழல் அறிக்கையிடலில் புதிய ஊடக முன்முயற்சி

2026-09-07 15:33:29
news-image

ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார...

2026-09-07 15:24:19
news-image

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை...

2026-09-07 15:32:04
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில்...

2026-09-07 15:14:09
news-image

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர்...

2026-09-07 15:01:28
news-image

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள்...

2026-09-07 14:56:43
news-image

முல்லைத்தீவு மாத்தளன் சிறுகடலில் அதிர்ச்சி: இலட்சக்கணக்கான...

2026-09-07 14:46:14
news-image

தாய்லாந்து செல்ல வீசா இல்லா அனுமதி...

2026-09-07 14:37:13
news-image

யோஷித ராஜபக்‌ஷ தனது மேல்முறையீட்டை மீளப்...

2026-09-07 14:25:56
news-image

தூய்மையான நாட்டை கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர...

2026-09-07 14:17:54